என் நட்பு
இன்றும் தித்திக்கின்றது அந்தநாட்கள்
கண்களில் காவிரி ஓட உணர்ந்தேன்
நினைவுகளிலும் நான் வாழ்ந்த சுகமே..
மனமோ மறக்கவில்லை - அதை
மறந்தால் நான் மனிதனில்லை
பிரிந்த நட்பினைக்காண
பெண்ணவளின் கூந்தலில் சூடிக்கொள்ள
ஏங்கும் மலர்போல் ஏங்குகிறேன்
எந்தன் நட்புதனை சுவாசித்ததால்....