எய்ட்ஸ்

ஒருவனை விரும்பிருந்தால்
சீதையாக வாழ்ந்திருப்பேன்

பலரை விரும்பியதால்
சிதைக்கப்பட்டேன்

இந்த கவிதை வெறும்
மையால் எழுதப்பட்டவை அல்ல
என் போன்ற பெண்களின்
இரத்தத்தால் எழுதப்பட்டவை

எயிட்ஸ்
அல்லும் பகலும்
விழித்திருக்கும் பின்பு
ஆளையே கொன்றுவிடும்

உடல் சுகம் கண்டு
உதிரத்தில் கலந்து
இப்போது
உயிர் வலி காண்கிறோம்

உறவுகளும் ஏற்கவில்லை
விரும்பி தொட்டவனும் ஏற்கவில்லை
எங்கள் உடம்பே எங்களை ஏற்கவில்லை

இந்த வரிகள்
எழுத பட வேண்டியவை இல்லை
எங்கள் கல்லறையில்
பொறிக்கப்பட வேண்டும்

...........இப்படிக்கு
பாதிக்கப்பட்ட பாவங்கள்

எழுதியவர் : தேன்மொழி (13-Oct-12, 2:46 am)
Tanglish : yeids
பார்வை : 147

மேலே