நினைத்ததை எழுதிவிட்டால் கவிதையாகிவிடுமா?

கனவில் தோன்றி
மனதில் நிறுத்தி
உணவாய் உண்ணும்
ஒரு உயிர் உணர்வு
கவிதை......

தினமும் நினைத்து
அறிவை துளைத்து
தெளிவில் தோய்த்து
மனதை வருடும் மகத்துவம்
கவிதை...

மகிழ்ச்சியில் மலரும்
நெகிழ்ச்சியை கிளரும்
புகழ்ச்சியில் உலரும்
புரியாத அர்த்தங்களில்
ஆயுளை வளர்க்கும்
கவிதை...

வைரம் எழுதினால்
தங்கம் படிக்கும்
தங்கம் எழுதினால்
வைரம் கிழிக்கும்
கவிதை இதுவோ?
கவிஞன் அழகோ?

கவிதை பொது
உணர்வு பொது
வார்த்தைகள் பொது
தமிழும் பொது
யாருக்கு அது?

நினைத்ததை எழுதிவிட்டால்
கவிதை ஆகிவிடுமோ?
நினைக்காமல் எழுத
கவிதை ஒன்றும்
திரைப்பட பாடல் அல்ல...

சங்க இலக்கிய திருடர்கள்
கவிஞர்களாய் உலாவரும்
வேளையில்...
நினைப்பதை எழுதுவதும்
கவிதை தான்...

எழுதியவர் : த. நாகலிங்கம் (13-Oct-12, 2:35 pm)
பார்வை : 337

மேலே