தலைமுறையாக...!

தவமிருந்து முன்னோர்கள்
தந்து விட்டு சென்ற பல
தலையாய கடமைகளோ எத்தனை .,
தான் தனியாக
தனக்காக செய்து வரும் கடமைகளின் - - உடமைகளோ எத்தனை ..?

தாய் தந்தையர்கள் பின்பற்ற சொல்லும் பல
தன்னடக்க ஒழுக்கத்தையும்,
ஆன்றோர்கள் படிப்பித்த அரிய பல
செயல்களையும்,...

இவைகளை போல பலவும்,,,....

முன்னோரின் பழக்கத்தை
முறையாக பின்பற்ற
முயலுவோம்,....!

அவர்களை
கண் முன்னே காணாத போதும்,
இறை நட்பு இல்லாத போதும்,
ஆன்றோர்கள்
அருகில் இல்லை என்றாலும்
அயராது பின்பற்றுவோம்..!

அடுத்த வாரிசுகளும்
பின்பற்றி பயன்பெற
வழிவகுப்போம்..!

இவைகள் என்றும்
தொடரட்டும்
தலைமுறை தலைமுறையாக....!

எழுதியவர் : தாடான் மோகன் கெளதம் (14-Oct-12, 1:46 am)
சேர்த்தது : Kavi Gowtham
பார்வை : 135

சிறந்த கவிதைகள்

மேலே