காதல் துளி

காதல் தருணங்களில்
உன் ஒட்டுமொத்த அன்பையும்
மழையாய் தூவி சென்றாய்......
மரமாய் தேக்கிக்கொண்டேன் .......
ஒவ்வொரு துளியாய்
உதிர்த்து ஆசு......வாசிக்கிறேன் .....
நம் காதல் நினைவாய்
நான் சிந்திய கண்ணீர் துளியின்
மொத்த வெப்பத்தை அனைத்து போகிறது.....
அந்த ஆனந்த துளி .....
எங்கோ தூரத்தில் நீ .....
நீ எங்கென்று அறியாத துரத்தில் நான் .....ஒவ்வொரு நொடியும்
உன்னை நினைத்துக்கொண்டே வாழ்கிறேன் என்று பொய்சொல்லவில்லை
என் பிள்ளை பேர் சொல்லும் ஒவ்வொரு தருணங்களில் மட்டும் ......
கணவன் திட்டும் தருணங்களில் உன் அன்பு வார்த்தைகள் முட்டி மோதி வந்து விடுகிறதே ......
எத்தனை முறை தடுத்தும் உன் நினைவை நினைக்கும் என் மனதின் அமைதிக்காய் உறங்கும் வேளையிலும் உதடுகள் உளறி போகிறது உன் பெயரை.......
உன்னால் என் இல்வாழ்வில் சண்டையென்று எப்படி சொல்வேன் உன் மனதை கொன்ற என்னால் எனும் போது.....

எழுதியவர் : pavi (17-Oct-12, 12:43 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : kaadhal thuli
பார்வை : 137

மேலே