நீண்ட நாள் பின் ,,,,

கடை தெருவில் பாதை ஓரங்களில்
உன்னை காண்பேன்
எப்படியாவது நின்று
உன்னை பார்ப்பேன்...
பேச்சு இல்லாமல்
ஊமையாகி நாம் இருந்தாலும்
ஆயிரம் எண்ணங்கள்
மறைந்து இருக்கு
சொல்ல முடியாமல் ...
மரங்களுக்கு ஆயிரம்
கண்கள் இருக்கு
காற்றுக்கு ஆயிரம்
காதுகள் இருக்கு
ஒரு நாளும் ...
உன்னை எனக்கு கிடைக்காது ...
பேசுவதினால் கவலை அதிகம்
அதனால் மௌனமாய் இருக்கிறேன் ...
கடல் எதற்கு ...?
தாகம் தீர்க்க முடியா விட்டால் ..
தோணி எதற்கு ...?
தண்ணீரில் போக முடியா விட்டால் ..
கண்கள் எதற்கு ...?
நினைப்பதை பார்க்க முடியா விட்டால்
மலர்கள் எதற்கு ...?
தேன் எடுக்க முடியா விட்டால் ....

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (17-Oct-12, 12:05 pm)
சேர்த்தது : ilmunnisha3
பார்வை : 130

மேலே