உன்னோடுதானே இருக்கிறேன்
உன்னோடுதான் அமைதியில்
ஆனந்தமாய் இருந்துகொண்டிருந்தேன்.
உன்னோடுதான் காதல்மொழியில்
கரைந்து உறைந்து கிறங்கிக்கிடந்தேன்.
உன்னோடுதான் உயிரணுக்களில்
இடை விரவிப் பரவிக்கிடக்கிறேன்.
உன்னோடுதான் உறவுகொண்டு
மருவி இறைவனை தரிசித்திருந்தேன்.
உன்னோடுதான் உந்தன் கண்ணோடுதான்
கனவுகளுக்குள் சிக்கித்தவித்திருந்தேன்.
உன்னோடுதான் உன்னழகினில்தான்
மயங்கி உறங்கிக்கிக்கிடக்கிரேன்.
உன்னோடுதான் உன்னிதழோடுதான்
தேன்பருகிக் களைத்திருந்தேன்.
உன்னோடுதான் உன்மெய்யோடுதான்
உரசி இன்பத்தில் குளித்துக்கிடந்தேன்.
இன்னுமா உன் சந்தேகம், என் சந்தோசத்தில்,
இல்லை பொறாமையின் உச்சமா,
உன்னோடுதானே இருக்கிறேன் நாள்முழுதும்,
பின்னேன் என்மீதே கல்லெறிந்துபார்க்கிறாய்.
உன்னோடுனான் இருப்பதற்கே இப்படியெனில்
என்னிலைஎன்ன யோசித்துப்பார், மரணம்தான்.