***(((ஏமாற்றமடைந்த ஒருவனின் கவலை))) ***
கி.மு கி.பி மறைந்தது
ஈமு காலம் பிறந்தது
வாயில்லா ஜீவனை வளர்த்தேன்-இதற்காக
பல கோடிகளை கொடுத்தேன்
பணம் குவிக்க ஆசைப்பட்டேன்
மனம் தவிக்க கண்ணீர் விடுகிறேன்
கேடிகள் தொடங்க
கோடிகள் முடங்க
தொடக்கியவன் பதுங்கி விட்டான்
தொடர்பில்லா இடத்தில்
கோடிகளை ஏமாற்றி ஓடி போனவனை பிடிக்க
தேடி போனது ஒரு கூட்டம்
அங்கு இரு பிரிவினருக்கும் நடந்தது
பங்கு பிரிக்கும் போராட்டம்
என் நிலை முடிவில்லா திண்டாட்டம்
பணம் சம்பாதிக்க ஆசை படுகிறவர்கள் பலர்
குறுக்கு வழியில் செயல்பட்டு சம்பாதிப்பது பகை மட்டுமே
ஈமு-வளர்ப்பில் ஏமாற்றமடைந்த ஒருவனின்
கவலையை நினைத்து என்னுள் தென்பட்டவைகளை எழுதியுள்ளேன்
**************************** ராஜ்கமல் ********************************
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
