என்னை தழுவிய காற்று
என் மேனி சிலிர்க்க வைக்கும்
உன் ஸ்பரிசம்
உணர்த்துகிறது
என்னிலும் என்னைச்சுற்றிய
பிரபஞ்சமெங்கிலும்
நீக்கமற வியாபித்திருக்கும்
உன் இருப்பை !!
நீ வரும் பாதைஎங்கிலும்
உன் தழுவலின் சுகத்தை
அள்ளி வருகிறாய்
புதிய ரெக்கைகள் தருகிற
உன் தொடுதலில்
நானும் பறக்கிறேன்
உன் கைத்தலம் பற்றி
ஒரு சிட்டுக்குருவியின்
உதிர்ந்த சின்னஞ்சிறு இறகாய்...!!!