உற்று பார்

உற்றுப் பார்
ஒரு முறை உன்னை உற்றுப் பார்!
ஒருவேளை
வாச்சாத்தியில்
ஆதிவாசிப் பெண்கள்
கற்பழிக்கப்பட்டபோது
நீ
குறுந்தகட்டில்
ஆபாசப் படம்
பார்த்துக்
கொண்டிருந்திருப்பாய்,
ஒரு முறை உன்னை உற்றுப் பார்!
ஒருவேளை
ஈழத்தில் தமிழ்ப்பிணம்
எரிந்த போது
நீ
சமையல் அறையில்
தேநீருக்கான
பால் கொதியை
குறைத்துக்
கொண்டிருந்திருப்பாய்,
ஒரு முறை உன்னை உற்றுப் பார்!
ஒரு வேளை
மும்பை சகோதரர்கள்
தீவிரவாதிகளிடம்
இறந்துக் கொண்டிருந்தபோது,
நீ
பக்கத்து வீட்டுப்
பெண்ணிடம்
கைபேசியில்
அளவலாவிக்
கொண்டிருந்த்திருப்பாய்,
தெரியுமா?
இந்த உலகம்
உன்னை
அவ்வளவாய்
உற்று நோக்குவதில்லை
ஆதலால்
ஒரே ஒருமுறை
உன்னை நன்றாய்
உற்றுப்பார்.