நான் ணி

காதல் தூதுவனாய்,
நட்பின் பாலமாய்,
மகிழ்ச்சியின் ஊற்றாய்,
மனஅயுதத்தின் பிறப்பிடமாய்,
சமூக அவலங்களின் உறைவிடமாய்,
சமுதாய முன்னேற்றத்தின் பாலமாய்,
பெண்ணை ஆணாக ஆணை பெண்ணாக
உலகமெனும் நாடக மேடையில்
நடிக்கவைத்து அழகுபார்க்கும் கதாசிரியனாய்,
பாலும் விஷமும் கலந்து
தரும் அட்சயபாத்திரமாய்,
மனிதர்களை அடிமைபடுத்திய
அறிவியல் அரசனாய்,
ஒன்றே குலமாய் ஒருவனே தேவனாய்,
இலக்கிய இலக்கணமாய்.
மனிதன் பேசும் மொழியாய்.
கலியுகத்தில் இரட்சிக்க வந்த தேவனாய்,
எங்கெங்கு காணினும் நீ,
என் மடியிலும் தவழும் கணி(னி) நீ !