பாசம்
பறவைக் கூட்டில் குஞ்சுகளிருக்க
தாய்ப்பறவை கொண்டுவந்தூட்டும்
உணவு பாசம்
அந்த மூன்று நாட்களில்முடியாமல்
அம்மாவின் மடியில்மகள்
தலை சாய்த்து படுப்பது பாசம்
கட்சித் தலைவனின்
பிறந்த நாளுக்கு போஸ்டர் அடித்து
ஒட்டுவது ஒருவகை பாசம்
அதனால் வசூலில் இ றங்கி
வேலைக்குப் போகாமல்
வயிறு வளர்ப்பது வேஷம் கலந்த பாசம்
கல்லூரி படிக்கும் காலம்
கண்டகண்ட நடிகனுக்கு
கட்டௌட் வைப்பது ஒருபாசம்
படிப்பில் கோட்டைவிட்டு
தோற்று நிக்கையில்
வாயிலும் வயிற்றிலும்
அடிக்குமது பெற்றவயிறு பாசம்
எதிர்க்கட்சி ஆனவுடன் எத்தினமும்
மக்கள் போராட்ட மென்று ஒருபாசம்
அது ஆடு நனைகிறதென்று
ஓநாய்கள் ஒன்றுகூடி அழுதபாசம்
பச்சை குழந்தையின்
அழுகுரல் கேட்டதும்
அன்னை பாலூட்டுவது பாசம்
அது ரத்த பாசம்
கடைவீதி போனால்
வியாபாரி காட்டுவார்
புன்னகையோடு ஒரு பாசம்
அது வியாபார பாசம்
கலவிக்கு முன்னே
கணவன் காட்டுவான்
காதலோடு ஒருபாசம்
அது காரிய பாசம்
பாசம் பாசம் பாசம்
பாசங்கள் பல பார்த்தோம்
வேசம் வேசம் வேசம்
வேசங்கள் களைந்து ஜெயிப்போம்