பருக்கைகள்தாம்.....

இன்னமும் சில பருக்கைகளுக்காகத்
தம் குரலை இழந்து கொண்டிருக்கின்றன
சில பறவைகள்.

இன்னமும் சில பருக்கைகளுக்காக
வாலாட்டிக் கால் நக்குகிறது
ஒரு மிருகம்.

இன்னமும் சில பருக்கைகளுக்காக
கடல் தாண்டி விரிகிறது
சில சிறகுகள்.

இன்னமும் சில பருக்கைகளுக்காக
முகம் தாண்டி விரிகிறது...
என் பற்கள்.

பருக்கைகள்தாம்...

பணிய வைத்துவிடுகிறது ....
வாழ்வை.

எழுதியவர் : rameshalam (26-Oct-12, 5:13 pm)
பார்வை : 115

மேலே