பறந்து விரிந்த உலகம் - சுருங்கிப் போன உள்ளம்
அப்பா அம்மா முகத்த பாத்து
ஆறேழு நாளாச்சி
ஆளுக்கொரு லேப்டாப்பே
கையில் கொண்டு போயாச்சி....
பிஸி பிஸி பிஸி பிஸியோ பிஸி
அக்கா அண்ணா ரெண்டுபேரும்
அலைஞ்சி திரிஞ்சி படிக்கிறாங்க
ஆனா 24 மணி நேரமும்
அரட்டைதான் செல்போனிலே - ஐயோ
பிஸி பிஸி பிஸி பிஸியோ பிஸி
இருமிக் கிடக்குறாரு திண்ணையிலே தாத்தா
இனிமையா பேச யாருமில்லே.....
இழுத்து இழுத்து வலிப்பில் அலறுறார் - இங்கே
இருப்பது என்னைத் தவிர யாருமில்லை
பொம்மை என்னை தங்கச்சி என்று - அன்று
பொழுது போக்கியே விளையாண்டனர் அவர்கள்
பொணம் ஆகப் போகிறார் தாத்தா
பொம்மை நானும் என்ன செய்வேன்......!
அழக்கூட திராணி இல்லை
அழுக்குப் பொம்மை நானே ஆனேன்.....!
மூச்சடங்கி தாத்தா கிடந்தார்.....
மூச்சில்லாமல் என்னைப் போலே.....
விளையாட யாருமில்லை - எனினும்
விழி இரண்டில் கண்ணீர் இல்லை....!