இரக்கம் காட்டு இறைவா !!

இரக்கம் காட்டு இறைவா !!

பூப்பெய்த பாவத்திற்க்குதான்
மாதத்தில் ஒரு வார நிந்தனையா ?
மூப்படைந்த பொறாமை பூக்கள் - உ(ம)னக்கு
கோபத்தில் கொடுத்த கோர தண்டனையோ ?

கொடுத்திட்ட தண்டனைக்காலகட்டத்தின்
முதல் மூன்று நாட்களும் , உயிரே !
உன் உயிரது துடித்திடும் தவிப்பதனை
கண்டதில்லை என்றபோதும் , கேட்டதற்கே கண்ணே !

என் புறக்கண்களும் ,அகக்கண்களும் மட்டுமின்றி
ஒவ்வோர் , நகக்கண்களும் கண்ணீர் வடிப்பதை
நீ அறிந்திருக்க நியாயமில்லை தான் .

உன் உள்வலியை உள்மூடி , உள்மறைக்க உள்ளத்தில்
உள்ளதிலேயே நல்லவழி தேடும் கள்ளி நீ என்றபோதும்
உள்ளதை உள்ளபடி உரைக்கும் கன்னடியான உன்
உள்ளமது , உடையவனை ம(றை) றப்பதில்லை ஒருபோதும்

இல்லாத இறைவனவன் இருப்பதை போல் இருந்துவிட்டால்
கொல்லாத என் கண்களுக்கு அவ்வில்லாதவன் தெரிந்துவிட்டால்
சொல்லாததை சொல்லிடுவேன் ,என் சிரத்தை அவன் காலகளிளிட்டு
பொல்லாத (மாதவிடாய் ) வலியினை போக்கிடு என் பெண்களைவிட்டு !!

எழுதியவர் : (29-Oct-12, 6:34 am)
பார்வை : 214

மேலே