படைப்பாளிகளின் கவனத்திற்கு -பகுதி-11 பிழையின்றி எழுதிட.....
தோழர்களே....
அண்மையில் இறக்கம் இரக்கம் குறித்து சில தவிப்புகள், சர்ச்சைகள் தளத்தில் கண்டேன்...மயங்கொலிச் சொற்கள் உண்டாக்கும் கோளாறுகள் பலருக்கும் தெரிந்தால் இச்சிக்கல் குறையும்.எனவே பட்டியல் தொடர்கின்றேன்...
தோழர் தம்புவுக்கு நன்றிகள்.
.
உலவு =நட
உளவு =ஒற்று
உழவு =கலப்பையால் உழுதல்
உழி = இடம், பொழுது
உழு = நிலத்தை உழு
உளி = தச்சுச் கருவிகளுள் ஒன்று
உலு = தானியப் பதர்
உளு =உளுத்துப் போடுதல்
உளை = பிடரி மயிர், தலை, சேறு
உலை = கொல்லன் உலை, நீருலை
உழை =பாடுபடு, பக்கம், கலைமான்
உழுவை =புலி
உளுவை =மீன் வகை
எல் =கல், மாலை, சூரியன்
எள் =எண்ணெய் வித்து, நிந்தை
எலு =கரடி
எழு =எழுந்திரு, தூண்
ஒளி =வெளிச்சம், மறை(த்துவை)
ஒலி =சப்தம், நாதம், காற்று
ஒழி =அழி, தவிர், கொல், துற
ஒல் =ஒலிக்குறிப்பு
ஒள் =அழகு, உண்மை, அறிவு, ஒளி
களங்கம் = குற்றம், அழுக்கு
கலகம்= போர், அமளி, இரைச்சல்
கழகம் =சங்கம், கூட்டமைப்பு
கழங்கம்= கழங்கு, விளையாட்டுக் கருவி
களி =மகிழ்வு, இன்பம்
கலி =கலியுகம், பாவகை, சனி
கழி =கோல், மிகுதி, உப்பளம்
களை =அழகு, புல், பூண்டு, அயர்வு
கலை= ஆண்மான், சந்திரன், கல்வி
கழை =மூங்கில், கரும்பு, புனர்பூசம்
கல் = மலை, பாறை, சிறுகல்
கள் =மது, தேன்
கலம்= கப்பல், பாத்திரம்
களம் = இடம், போர்க்களம், இருள்
காலி =ஒன்றுமில்லாத்து, வெற்றிடம்
காளி =துர்க்கை, மாயை
காழி =சீர்காழி (ஊர்)
காலை= பொழுது, விடியற்பொழுது
காளை = காளைமாடு, இளைஞன்
காலம் =பொழுது, நேரம்
காளம் =எட்டிமரம், சூலம்
கிளி =பறவை, வெட்டுக்கிளி
கிலி =அச்சம், பயம்
கிழி =கிழித்துவிடு, முடிப்பு (பொன்)
கிழவி= முதியவள், மூதாட்டி
கிளவி = சொல், மொழி
சலம் =நீர், சிறுநீர், குளிர்
சளம் =பொய், துன்பம், வஞ்சனை
சாலை= பாடசாலை, பொது மண்டபம்,
அறக்கூடம்
சாளை =கடல்மீன்
சாழை =குடிசை, குச்சு
கழித்தல்= சுழலுதல், நீர்ச்சுழல்
களித்தல் = முறித்தல், சினத்தல்
சூலை = வயிற்று நோய்
சூளை =செங்கல் சூளை
சூள் ==சபதம்
சூல் ==கர்ப்பம்
சூழ் ==சூழ்ந்துகொள், சுற்று
சேல் = மீன்
சேள் =மேலிடம்
சோளி =கூடைவகை
சோலி= ரவிக்கை, காரியம்
சோழி =பலகரை
தவளை= ஓர் உயிரி
தவலை = பாத்திரம்
தளம் =மேடை, மாடி வீட்டின் அடுக்கு
தலம் =இடம், பூமி
தழம் =தைலம்
தழை =தாவர உறுப்பு
தலை =மண்டை
தளை =விலங்கு
தாலம் =உலகம், தேன்
தாளம் =இசைக்கருவி, ஜதி
தாளி =தாளித்தல், பனை
தாலி =மங்கல நாண்
தாழி =கடல், குடம், பரணி பெரியபாண்டம்
தாள் =முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம்
தால் =நாக்கு, தாலாட்டு
தாழ் =தாழ்தல், குனிதல்
வாசியுங்கள்...பயன்படுத்துங்கள் படைப்புகளில்...
அன்புடன் அகன்