விலை மாது

அவள் .....
சுயநலம் கலந்த பொதுநலவாதி
சுகம் தந்திடும் மனிதகருவி
வறுமைக்காக தன்னையே விற்பவள்
வருமானம்பெற தன்மானம் இழப்பவள்
பூமியில் வாழ்ந்திடும் காகிதப்பூ
கசங்கிப் போனாலும் மலர்பவள் !
தடமாற்றம் செய்திட்டக் காரணத்தால்
தடுமாற்றம் என்றுமே அவள்மனதில் !
வீதியில் நின்றிடும் விலைமாது
வாழ்ந்திட வழியறியா நிலையோடு !
வாழ்கிறாள் இன்றும் பூமிதனில்
வழிபிறக்கும் என்கிற நம்பிக்கையில் !

எழுதியவர் : பழனிகுமார் (31-Oct-12, 2:09 pm)
பார்வை : 237

மேலே