எறும்பும் இறகும்

அந்தச் சிறிய எறும்பின்
கண்களில் பட்டது
ஒரு பறவையின் இறகு....
அளவிட முடியாத
ஆனந்தம் கொண்டு
அந்த இறகை
தன் பொந்து வீட்டுக்குள்
இழுத்துச் செல்ல நினைத்தது
அந்தச் சிறிய எறும்பு...
பலமுறை தன் பாதையில்
தடைகளை எதிர்கொண்டு
இடை நிறுத்தப்பட்டாலும்
தேவையான மாற்றுப்பாதையை
தேடிக்கொள்ளும் உடனே
ஒரு கட்டத்தில் அதன் பாதையில்
மிகப்பெரிய விரிசல்....
ஆனாலும் அந்த எறும்போ
விரிசலின் விளிம்பு வரை
அந்த இறகை இழுத்து வைத்து
நீண்ட தூரம் பயணித்து
விரிசலின் மறு பக்கம் சென்று
இறகை மீண்டும் இழுக்கத் துவங்கியது
இறுதியில் அந்த எறும்பு
அதன் பொந்து இல்லத்தை
அடைந்த போது...
அதன் சிறிய துளை வீட்டுக்குள்
அந்தப் பெரிய இறகு நுழையவில்லை
ஆனாலும் அந்த எறும்பு
அந்த இறகு மீது ஏறி
வெற்றிக் களிப்பில் மிதந்தது
அதன் காவியப் பயனத்தில்தான்
எத்தனை இடறுகள்....
இந்த எறும்புக்கதை துரும்புக்கதை
இங்கே எதுக்கப்பா....?
என்று கேட்கும் நண்பர்களே!
இப்படித்தான்
என் எழுத்துப் பயணத்திலும்
எனக்கு ஏகப்பட்ட இடையூறுகள்