பறக்கும் பட்டமாய் நான்... என்றென்றும்...

உயரம்
செல்ல செல்ல
சுவாசிப்பது
கடினமாகும்
என்ற
அறிவியல்
அறிந்தும்,
வானுயரம் அடைந்தேன்...
நீ விட்ட பட்டமாய்...
உன் காதலெனும்
நூலினைக்கொண்டு...

நூல் வழியாய்
நீ ஊதித்தள்ளும்
காற்றை
குடித்து
வாழ்ந்து வந்தேன்...
வசந்தமாய்
வானிலே...

விதியின் வசத்தால்
திடீரென
காணாமல்
போனாயடி
என்கண்மணி!!!

போனவள் நீ
நூலை
அறுத்துவிட்டு
சென்றிருந்தாலாவது
பரவாயில்லையடி
பெண்ணே,
எங்கேயாவது சென்று
தஞ்சம்
அடைந்திருக்கும்
இந்த
நெஞ்சம்!!!

நீயோ
நூலை
ஒரு கல்லில்
கட்டிவிட்டு
சென்றுவிட்டாயே...
பெண்ணே!!!

உன் பிரிவை எண்ணி,
மெல்லிய
காதல்நூல்
இன்று
துருப்பிடிக்கா
வன்னிரும்பு
நினைவுகளாய்
மாறி
என்னோடு
ஒட்டிகொண்டதடி
என் நவமணியே!!!

இன்று
சுவாசிக்கவும்
திணறுகிறேன்...
உன் பூங்காற்று
இல்லாமல்...
ஒற்றை
பட்டமாய்
பறந்துகொண்டு!!!

வானுயரத்தில்
இருக்கும்போதும்,
என்னை
கடல் நீராய்
வந்து
நனைக்குதடி
உன்
நினைவுகளால்
எழுந்த
என் கண்ணீர்
அலைகள்...

நிலைமொழியும்
வருமொழியும்
சேர்வது தானடி
புணர்ச்சி!!!

உன் மொழி கேட்கா
என் வாழ்வில்
எனக்கேதடி
மகிழ்ச்சி!!!

உறவிருந்தும்
நட்பிருந்தும்...
நீ இல்லா
இவ்வாழ்வில்
ஏங்கி தவித்து
தனிமையில்
வாழ்கிறேனடி.. ஓர் அனாதையாய்!!!!

எழுதியவர் : தமிழ்செல்வன் (1-Nov-12, 6:09 pm)
பார்வை : 278

மேலே