என் ஆசை சொல்லட்டுமா???
எனைச்சேரும் என்னவளுக்கு
தகுதி ஒன்றும் தேவையில்லை
சின்ன சின்ன கனவுகளோடு
செல்ல செல்ல ஆசைகளோடு
எனைச்சேர ஆசை...
எனக்காக அவளும்
அவளுக்காக நானும்
என்றில்லாமல்...
உள்ளவரை வாழாமல்
உணர்வுகளை பகிர்ந்து
உண்மையாய் வாழ்ந்திட ஆசை...
ஒருகோடி இன்பத்தை
ஒற்றை முத்தத்தில்
கண்டிட ஆசை...
செல்லச் சண்டைகள்
ஒருநொடிக்குள்
செத்துவிட ஆசை...
தனிமையில் இருந்தாலும்
என்னை எப்போதும்
பிரியாத பிரியமானவளாய்...
கனவுகளைவிட
என்னை அதிகம்
தொடுபவளாக ஆசை...
உறக்கத்திலும் அவள்நினைவு
உறங்காமல் தொடர ஆசை...
கட்டாயத்தினால் காதலிக்காமல்
காதலால் என்னை
கட்டிக்கொள்ள ஆசை...
கவலையோ கவலைகளோ
இருவரில் யாரைத்தொட்டாலும்
ஒருவராகி
ஒழித்துக்கட்ட ஆசை...
என்னிலை வந்தாலும்
தன்னிலை மறவாமல்,
மற்றவருக்காக அல்லாமல்
எங்களுக்காக வாழ ஆசை...
முதுமை தொட்டாலும்
முற்றாத முதல்காதலோடு
முறையாக வாழ ஆசை...
உயிரை உருக்கி
உன்னைப்போல் ஒன்றும்
என்னைப்போல் ஒன்றும்
உருவாக்கிட ஆசை...
நன்றாக நடக்க தெரிந்தும்
நாளும் நம்கை கோர்த்து
நடந்திட ஆசை...
சந்(தேகத்தை) வென்று
சந்தோஷ தீபம்கொண்டு
சுகமாய் உறங்கிட ஆசை...
அவசர உலகில்
அன்பை அணிந்து
அர்த்தமுள்ள வாழ்வை
வாழ்வோம்
வா அன்பே!...
@அனித்பாலா.