ரகசிய தீ
என்னோடு நீ இருந்தால்....
வேறெந்த நினைவுமில்லை....
என்னை விட்டு நீ பிரிந்தாலோ....
நீயன்றி வேறு நினைவில்லை...!
பற்றி எரிகிறேன் நான்....
பகல் இரவாய்...!
எனக்குள் நீ....
ரகசிய தீ...! உன்னால்....
எரிந்து கொண்டிருக்கிறேன் நான்...
ஒரு தீபம் போல...
தென்றலாய் வந்தால் சுடர் விடுவேன்!
புயலாய் வந்தால் உயிர் விடுவேன்!
வீசிக்கொள் உன் விருப்பம் போல...!