கவிதையே!

ஏன் பிறந்தாயோ???
வார்த்தைகளை அணிந்துகொண்டு
உலாவரும் உனக்குள்தான்
எவ்வளவு சக்தி...!
நொடிப்பொழுதில் வாசிப்போரைக்கூட
நேசிக்க வைத்துவிடுகிறாயே...!

எப்போதோ நடந்ததை
ஞாபமாக்கி மறைகிறாய்...
நினைவுகளை ஏற்று
நிஜத்தில் வாழ்கிறாய்...!
காணமுடியாதவரின் நெஞ்சத்திலும்
தாக்கத்தை தருகிறாய்
செவிவழி நீ நுழைந்து...!

தாகம் சோகம் தீர்த்திடவே
தனிமையிலும் துணைவருகிறாய்...!

ஆறுதலுக்காக பிறந்திட்டாலும்
அமைதிபெற மறுக்கிறது – மனம்,
நீ சுமக்கும்
களங்கம் கண்டு...!

எழுதியவர் : anithbala (3-Nov-12, 10:56 pm)
பார்வை : 208

மேலே