தாய்பாசம்

என்னதொரு பாவம் செய்தேன்
என்னைத் தோலுரித்துத் தொங்கவிட
தடவிக் கொடுப்பார் என்றெண்ணி
மடிய வைப்போரிடம் சென்றடைந்தேன்.

உங்கள் குடும்பத்தோடு உண்டுமகிழ
என் குடும்பத்தை வேட்டையாடினீர்கள்.
உங்கள் இருதயம் நன்றாய் துடிக்க
என்னை துடிதுடிக்க சாகடித்தீர்கள்.

ஒர்சொட்டு இரத்தம் உங்களுடலில் ஊற
என் உயிரை தியாகம் செய்தேன்.
எனக்கு நன்றிகடன் செய்யவேண்டாம்
என்இறுதி விருப்பத்தைச் செய்தால் போதும்.

சென்றவாரம் என்தாயைக் கொன்றீர்
இந்தவாரம் என்னை கொன்றீர்.
என்குடும்பத்தில் மிச்சமிருப்பது என்பிள்ளையே
உங்கள் கத்திக்கு அடுத்தவேலை அவளிடமே.

இருந்தும் காப்பாற்ற முடியவில்லை அவளை
இறந்தாவது காப்பாற்ற முயலுகிறேன்.
மறுபிறப்பிலும் உங்களுக்கு உணவாக வருவேன்
விட்டுவிடுங்கள் அவளை மட்டுமாவது!!!

எழுதியவர் : சுமி (4-Nov-12, 2:49 pm)
பார்வை : 411

மேலே