அவள் என்னைப் பார்த்து விட்டாள்.
ஐயய்யோ, அவள் என்னைப்
பார்த்து விட்டாள்
கையைக் காலை ஆட்டாமல்
பதை பதைக்க விட்டாள்.
பொய்யோ,இது மெய்யோ
எனக்குப் புரியவில்லை
‘சொய்’யென்று சிரசுக்குள்
பாயுது வெப்பம்.
கண்ணாள் அவள் முன்னால்
என்னை வரச் சொன்னாள்,
பெண்ணாள் அவள் உள்ளத்தின்
கிடக்கை அறிந்தேன்.
எங்கே செல வேண்டும் என
அணைத்துக் கேட்டேன்.
பொங்கும் பாசத் தூண்டலில்
எனக்கு முத்தமிட்டாள்.
கையை முன் பக்கம் நீட்டி
பாதை காட்டினாள்;
கைப்பையை வைத்து விட்டு
தூக்கிக் கொண்டேன்.
கிட்டாதோ என் அன்பு என
ஏங்கிய கண்ணாள்,
மிட்டாய்தான் தாத்தா என
மழலையில் சொன்னாள்.