தமிழ் முட்டுக்கட்டைகள்
தமிழ் வகுப்பில்
தமிழ் கவிதையெழுதினேன்....
ஆசிரியர் அதட்டினார்
பாடத்தை கவனி யென்று....
கவிதையில் மரபுகள் அழிந்து
புதுகவிதை ஆனது என்றார்....
உங்கள் வகுப்பறை மரபுகள் அழிந்திருந்தால்
நானொரு புதுகவிஞன் ஆகிருப்பேன்!!!....

