நான் விரும்பாத என் காதலனுக்கு...

நான் விரும்பாத
என் காதலனுக்கு...

எத்தனை
எதிர்பார்ப்புக்களுடன்
எனக்காக காத்திருப்பாய்
கலங்கி நிற்கும்
உன் ஈரக் கண்களை
ஓரக் கண்களால் பார்த்து
கிண்டலடித்த பாவிநான்!...

எனக்காக தவமிருக்கும் உன்னை
தோழிகளுக்கு
காட்சிப்பொருளாக்கி
தெருக்காவல் தெய்வம் என பெயர்
வைத்து இருக்கிறேன்!...

நீ தந்து
நான் வாங்க மறுத்த
பரிசுப்பொருட்களின்
விலை விசாரித்து
ஏளனப்படுத்தி இருக்கிறார்கள்
என் தோழிகள்!...

உன் காதல் கடிதங்கள்
என் வகுப்பறையில்
உரக்க வாசிக்கப்பட்டு
அதன் அன்பில்
அம்பெரியப்பட்டிருக்கின்றன!...

என் பருவ நாட்களை
பெருமை படுத்திய
காதல் கோமாளியாக நினைத்தே
உன்னை நிராகரித்தேன்!...

உன் காதல் கடிதங்களும்
ஏக்கப் பார்வைகளும்
கண்ணீர் பேச்சுகளும்
அர்த்தமுள்ள மௌனங்களும்
புரியவைக்காத உன்
அன்பை...
இப்போது புரிய வைத்து விட்டான்

கை பிடிக்க
காசு கேட்க்கும்
பேராசைக் கணவன் !...

எழுதியவர் : Ms Ameen (10-Nov-12, 9:34 pm)
பார்வை : 608

மேலே