நாடுவோம் நல்வழி ...!

பாடு பண்பாடு அதைக் கட்டிக் காப்பது
பெரும்பாடு !

நாடு நன் நாடு அது வளர்ந்து வருவது
நம்மோடு !

தேடு புகழ் தேடு அதைப் பேணிக் காப்பது
உன் பேறு !

ஓடு நீ ஓடு அது நின்று விட்டால் - நீ
வெறும் கூடு !

கூடு நீ கூடு நல்ல நண்பர் கூட்டம்
அதில் கூடு !

கேடு பெரும் கேடு இதை அறியாவிட்டால்
பெரும் கேடு !

கோடு ஒரு கோடு அதை போட்டு வாழ்ந்தால்
ஏது கேடு !

மூடு நீ மூடு உன் அறியாமையை
மண்ணோடு !

ஏடு நல் ஏடு அதை கற்றால் துணைவரும்
உன்னோடு !

காடு இடு காடு நல்ல சொந்தம் நிற்கும் - உன்
சவத்தோடு !

ஆண்டு பல்லாண்டு உன்புகழைப் பேசும்
அன்போடு !

எழுதியவர் : சௌ. சரண்யா (12-Nov-12, 3:48 pm)
பார்வை : 122

மேலே