விபச்சாரம்

தீபாவளி நேரம் ! நீல வானம்.
தடித்த உருவம் கறுப்பு மனிதர்
கையிடுக்கில் மஞ்சள் பத்திரிக்கை
பச்சை பச்சையான பேச்சுகள்
சிவப்பு விளக்கு சித்திரங்கள்
கனமில்லா கைப்பையுடன்
மத்தாப்பு சிரிப்போடு
கண்சிமிட்டும் ஊதாப்பூ
திரைச்சீலை விழுந்தது
கறுப்பு ஊதாவுடன் கலந்தது
வீணை மீட்பது வெளியில் கசிந்தது
பட்டாசு சத்தம் விண்ணை தொட்டது
திரைச்சீலை விலகியது
உடல் ரணமாய் வலித்தது
கைப்பை கனமாய் கனத்தது
எங்களுக்கும் தீபாவ(லி)ளி வந்தது.

எழுதியவர் : செபி. (13-Nov-12, 1:46 am)
பார்வை : 148

மேலே