என் முறை என்ன....?????????
பாதை மாறிப் பயணிக்கும் அவள் வாழ்வு,
போதை மாறிப்போகாத என் மாற்றங்கள்,
மறுபடியும் நேர்எதிராய்
சந்தித்துக்கொள்ள,
அவளைத் தொட்டுத்தொட்டுப்
பழகிய நினைவுகளை,
எடுக்கவா?
புதைக்கவா?
எரிக்கவா? - என
சிந்தனையோடு என் சிந்தை தடுமாற,
அவளும் எதிர்பாராவிதமாய்
ஒருகேள்வி கேட்டான்,
அந்த அழகுக்குப் பிறந்த
அறிவாளிப்பையன்,
“மாமா என்றழைக்கவா அம்மா.....?"
தயவுசெய்து,
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
நான் அவனுக்கு என்ன முறை...??