மனிதன் பெற்ற உயிருள்ள கல்

வயிற்றில் தொத்தி இருந்தது
குரங்குக் குட்டி
முதுகில் தொத்தி இருந்தது
தேளின் குஞ்சி
குளிராமல் காலிடுக்கில் இருந்தது - பென்
குயின் குஞ்சி
குப்பைத் தொட்டிக்குள் அழுதது - மனிதக்
குழந்தை

எழுதியவர் : (16-Nov-12, 1:42 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 152

மேலே