தந்தது எதுவோ ???

எழுதாத தாள்
எழுதாததால்
எதுவுமாகது !

எழுதிய தாள்
எழுதியதால்
எதுவுமாகும் !

எதுவுமாகும்
எதுவுமே - எப்போதாவது
அதுவுமாகும் !

அதுவாகும் போதுமட்டும்
அது, அதுவாகவே மட்டும்
இருப்பதில்லை !
இதுவாகவும் இருக்கிறது !

இதுவோ
அதுவோ
எதுவாயினும் - ஏதுவாயின்
எதுவாகவும் ஆகும்
வல்லமையை
தந்தது எதுவோ ???

எழுதியவர் : வினோதன் (20-Nov-12, 1:24 pm)
பார்வை : 174

மேலே