துரோகம்
நானும் நீயும் இணையமுடியாது இனி,
என்றாலும் என்னால் பிரியமுடியாது,
உன் நிழல் தந்த நினைவுகளை !
துரோகம் கொடியவிஷம்,
அது கொன்றுபோட்டுவிடும் கொஞ்சம்கொஞ்சமாய் !! போனது
நீ போனது சரிதான்!!
என் கேள்வி?
நான் இனியும் வாழ்வது சரியா? என்பதுதான்,
முடிவுகட்டி முடித்துவைத்துவிட்டாய் என் காதலை !!
எங்காவதுபோய் புதைக்கிறேன் நான்,
என் நியாயங்களையும்,
உனக்காகவே துடித்து துள்ளித்திரிந்த என் இதயக்குழந்தையையும்..........