மீள் பதிவு- வல்லரசு- (கிருபானந்த் ஜி)
இதுவரை தூங்கி கிடந்தது போதுமடா!
இனி விழித்தெழுந்திட வேண்டுமடா!
நீ விழிக்கும் இந்நேரம் முதல்
சமுதாயம் வெற்றி காணுமடா!
உலகம் உந்தன் கையிலடா,
அது சுழல்வது உந்தன் அறிவிலடா!
உன் அறிவின் மூலம் நீ சென்றால்
வெற்றி என்றும் உன்னிடமே!
லஞ்சம் இல்லா உலகை படைக்க
நெஞ்சை நீ நிமிர்த்திட வேண்டுமடா!
பிச்சைக்கார்ர்கள் இங்கு உண்டு!
நீ சில்லரை இடும் காலம் வரை!
அவர்களுக்கென்று உழைத்திடடா!
அவர் வாழ்க்கை முறையை மாற்றிடடா!
உன்னால் அது முடிந்திடுமே!
குப்பை குழிகள் அவர்கள் இருப்பிடமே!
உன் இதயத்தில் அவர்களுக்கென்று
இரக்கம் கொஞ்சம் காட்டிடடா!
சமுதாயம் உன் வீடென எண்ணி
ஒவ்வொரு நாளும் உழைத்திடடா!
விரைவில் இந்தியா
வல்லரசாக மாறுமடா!
எழுதியவர்: கிருபான்ந்த். ஜி
நாள்: 21012-11-01 நேரம்: 18:58:44
Added by :Kirubanand
பார்வை :85 (22-11-2012 15:45 வரை)
அன்பர் கிருபானந்த் அவர்களின் படைப்பு ஆங்கிலத்தில் பதிவேற்றப்பட்டதை தற்செயலாக கண்டேன். தட்டச்சு வசதிக் குறைபாட்டால் அது தமிழ் வாசம் இழக்க வேண்டாம் எனும் கடமையுணர்வால் உந்தப்பட்டு இதை தமிழில் தட்டச்சு செய்து மீள் பதிவு செய்துள்ளேன்.
தவறு இருந்தால் சுட்டிக்காட்டனால் திருத்தி மீண்டும் மறுபதிவு செய்ய சித்தமாய் உள்ளேன்.
அன்பர் கிருபானந்த் எங்கிருந்தாலும் கருத்து மேடைக்கு வந்து தங்களின் மேலான கருத்தை பதிவு செய்து கொள்ளவும்.
இனியும் ஏதேனும் என்னால் இயன்ற கடமை செய்யும் வாய்ப்பளித்தால் செய்ய சித்தமாயுள்ளேன்.