ஆனந்தப் பயணம்
இது என்ன ?
வைக்கோல் லாரியா ?
கம்பி ,சட்டம், திருகாணி
என்று
கிடைத்ததைப் பற்றிக் கொண்டு...
ஒரு ஆள்
இன்னொரு ஆளை
அணைத்துக் கொண்டு
கீழே விழாமல் ...
விரல் விண்டுவிடும் போல
காலில் மிதிக்கிறது
பூட்ஸ்கள் ,செருப்புகள் .கூடைகள் ...
விரலா ? சதைக் குழலா ?
வதைகள் தெரியாது
பெட்ரோலுக்கும்
டீசல் எண்ணைக்கும்
ஆக்சிலேட்டருக்கும்
உயிருள்ள வைக்கோல்கள்
ஏற்றிச் செல்லும்
பேருந்துகளின்
அழுகை சத்தம் ..
சந்தைக்குப் போகிறது
சட்டிப் பானை
வண்டிகளாக ..
மனிதர்கள்
ஒண்டல்கள்
முதுகெல்லாம் ...
ஆனந்தப் பயணத்தில் !!!