##@@@ எல்லாம் மாயை @@@##

கடவுளும்
ஒரு குழந்தை....,,,
அவன் விளையாட
அமைத்த மேடையில்.....,,,,
அனைவரும் பொம்மைகள்....!!!

காலத்தின்
பணி சலவை.....,,,,,
நிரம்பி வழிகின்ற
நிகழ்வுகள் பலவற்றையும்....,,,
நிறம் மாறாமல் வெளுக்கும்....!!!

உறவுகள்
கனவுகளின் சாயல்
சயனிக்கும் வரை ஆளும்...,,,,
சரிவிகித உணர்வுகளோடு
சந்தோசங்களும் சங்கடங்களும்...!!!

வாழ்வு
அறுசுவை உணவு....,,
அறிந்தவர்க்கு மட்டுமே
அற்புதமாய் ருசி கூட்டும்....,,
அறியாதவர்க்கு பசி போக்கும்...!!!

ஆயுள்
ஓர் தேர்வறை....,,
கட்டாய போராட்டம்
கால நீட்டிப்பில்லாதது....,,
கடமை முடிய வெளியேற்றும்....!!!

எழுதியவர் : புலமி (24-Nov-12, 2:28 pm)
பார்வை : 589

மேலே