நான் தேடிய நீ.......
வெள்ளை உடை போர்த்தி
நீ நடந்த நடைபார்த்து
ஹைக்கூ எழுதிய நான் தான்
உன் திருமண அட்டையை அச்சடித்தேன்
வறுமைக்கோட்டில் வாடிய என் குடும்பம்
பொறுக்கமுடியாமல் என் நெஞ்சம்
உறுகியபோதும்
வறுத்திக்கொண்டே நான் வயல் போனேன்
ஏறும், வரம்புகளும்
நம் வயிற்றுக்கு வழி சொல்லின
கரடான நிலம்
முரடான முதலாளிமார் மனம்
பிஞ்சுக்கை தழும்பாக
தாய்மனது மெழுகாக
அவ்வச்சகத்தில்
வேலை பெற்றேன்
மின் விசிரியோ
இருக்க கதிரையோ
இல்லாவிட்டாலும் தலைமேலே
கூரை இருந்தது
சுட்டுப்பொசுக்குவிடும் சூரியனிடமிருந்து
விடுதலை பெற்றது
ஒரு பரட்டை தலை
என்னைப்போலவே படிப்பிழந்த மனிதர்போலும்
உரிமையாளர்
இரங்கிவந்தார்
இரக்கம் காட்டினார்
காலைப்பொழுதில் பள்ளியும்
மாலைப்பொழுதில் அச்சகமும்
என் விலாசமானது
விடமுயற்சியெடுத்து
பல தடங்கள் தாண்டி
இழுத்துப்பிடித்து
எப்படியோ
பரீட்சைகளில் தேர்ந்து
நல்ல பேறுகளும் பெற்று
"பேண்ட்" அணிந்து
நச்சென்று இல்லாவிட்டாலும்
நாலு வார்த்தை இங்லிஷ் இல் கதைத்து
பட்டணத்தில் வேலை பார்க்கிறேன்
நான்கு சக்கர வண்டிகள் இல்லாவிட்டாலும்
நாலு காசு பையில் இருக்கிறது
கொஞ்சம் மதிப்பும் கிடைக்கிறது
கண்விழித்திருந்து நான் உழைக்க
கண்மூடி காலம் பறக்க
வீட்டில் பொறுத்தம் பார்க்கிறார்கள்
உழைக்கத்தெரிந்தவன் தானே
ஏக்கர் நிலம் காட்டி சிலர்
ஏலமும் பேசுகிறார்கள்
பட்டணத்துப்பெண் வேண்டாம்
பார்த்ததெல்லாம் வேண்டுமென்பாள்
கண்டவரோடெல்லாம் கைகோர்ப்பாள்
கேள்விகளுக்கெல்லாம் விதண்டாவாதமென்பாள்
வடைவேண்டுமென்பது போல விவாகரத்து என்பாள்
கிராமத்துப்பயளுக்கென்ன நாகரீகம் தெரியும் என்பாள்
கடைசியாக......
கிராமத்திலும் பெண் வேண்டாம்
அடுப்பங்கறையும் வீட்டு வாசலுமே
எல்லையாய் கொண்டிருப்பாள்
கணவன் என்னமோ தெய்வம் என்று
கருதியிருப்பாள்
குடும்ப உறவில் மட்டுமே மயங்கியிருப்பாள்
மாற்றான் சொல் பயந்து நடப்பாள்
கொஞ்சம் கலராகவும் இருந்துவிட்டால்
சிலசமயம்
ஊரறியாத ஒரு கவிஞ்சனுக்கு கருவாகவும் இருந்திருப்பாள்.....
செவ்வாயிலிருந்தா பெண் இறக்குவது
சொந்தங்களும் எறிந்துவிழுகிறார்கள்
பரம்பரை என்னமோ
செத்துவிடும் என்று பயப்படுகிறார்களோ???
நாள் தோறும் நான் பார்க்கிறேன்
அசல் முகங்களையும்
நகல் புகைப்படங்களையும்
யாரும் அதில் எனக்கென பிறந்தவள் போலில்லை....
..................
..................
உன்னைத்தவிர
உன்னைத்தவிர.....
வெள்ளைச்சீறுடை போர்த்திய நீ
அன்று
வெள்ளைச்சீறுடை போர்த்திய நீ........
இன்று
வண்ணச்சேலையில் இருக்கிறாய்
வாரிசுகளோடும் இருக்கிறாய்....
வரம்பேறி வந்த நான்
வறையறைகள் தாண்டி வரவில்லை
அதனால் தானே நீ இன்னும் என்னை
யாரோ என்பது போல பார்த்துச்செல்கிறாய்
ஏரெடுத்த கை
எழுத்துப்படிக்காமலே இருந்திருக்கனும்
ஏதோ ஒரு
ஏட்டுக்குமரியை
இந்நேரம் மணந்திருப்பேன்
குடிலும் வயலுமாய் இருந்திருக்கும்
என் பயணம்
கூழும் கஞ்சுமாய் இருந்திருக்கும்
என் வதனம்
ஏறோ ப்லேன் தாண்டி
ரொக்கெட் ஏறிப்பறக்கிறது
என் கனவுகள் இன்று
நாலெழுத்துப்படித்ததனாலோ....
செவ்வாயிலேனும் தேடிப்பாருங்கள்
என் தேவதை கிடைப்பாளா என்று.........
-Rikas Marzook -