!!!(((சின்ன சின்ன ஆசை)))!!!

பேதம்பாரா பசும்புல்லில் பரவிக்கிடக்கும்
பனித்துளியள்ளிப் பருக ஆசை
மோகமில்லா வெண்மேக கூட்டத்தில்
குடிலமைத்து வாழ ஆசை( ...)
மதங்கள்பாரா மழைநீரில் மனிதனாய்
முழுவதும் நனைய ஆசை
அசுத்தமில்லா ஆற்றுநீரில் அழகாய்
அன்றாடம் குளிக்க ஆசை (...)
கட்சிகள்பாரா காற்றோடு கலந்து
குட்டிக்குட்டி கதைகள்பேச ஆசை
தூய்மையான தென்றலைத் தழுவி
துள்ளித்துள்ளி விளையாட ஆசை (...)
வேற்றுமைபாரா விண்மீன் கூட்டத்தில்
ஒற்றுமையாய் விருந்துண்ண ஆசை
தீமைவிடுத்து நன்மைகள் புரிந்து
நட்சத்திரம்போல் ஜொலித்திட ஆசை(...)
ஏற்றத்தாழ்வுபாரா எரியும் எல்போல்
அநீதிக்கெதிரா எரிந்திட ஆசை
அன்றாடம் அரங்கேறும் அதர்மங்களை
சூரியன்போல் சுட்டெரிக்க ஆசை(...)
சாதிப்பாரா சந்திரனில் சங்கமித்து
சங்கதிகள் பலசொல்ல ஆசை
சங்கடம் தீர்ந்து நிலவின்மடியில்
நிம்மதியாய் நித்தமுறங்க ஆசை (...)