புயல்

ஆர்பரிக்கும் கடலாய்
மனக்கொந்தளிப்பு
நஞ்சு புகட்டபட்டதின்
வீரியம் போக
வேள்வியாய் ஒரு
அலைவழிப்பயணம்
முடிவில் நிதர்சனம் புரிய
அமைதி ஆழ்மனதில்
இரண்டு இரவு நித்திரையை
சேர்ந்து உறங்க போகிறேன்
இது கூட இல்லையெனில்
வீணர்களை வீழ்த்துவது
எப்படி..??