ஏனெனில், இது தமிழினம் !
தமிழீழக் கனவோடு
மண்ணில் புதைத்த
வீரத்தின் விதைகளே !
தமிழ்தாயின் மடியில்
அடுத்தடுத்து படுத்து
ஆழ்ந்து தூங்கும் - உங்கள்
நகங்கள் கூட - ஈழத்தின்
விடியலை எதிர்நோக்கிக்
கனவோடு காத்திருக்கும் !
சமர்க்களம் - உங்கள்
விளையாட்டுத் திடல் !
போட்டிகள் தோறும்,
எதிரிகள் தோற்பதும் - நீவிர்
வெற்றியை ஏற்பதும்
வழங்கங்களுள் ஓன்று !
வளர்ந்த நாடுகளிடமும்,
பேடித்தன அரசியல்
பெரிச்சாளிகளிடமும்
வட்டிக்கு வாங்கிய வீரத்தை,
பீய்ச்சி அடித்து அழிக்க - நாங்கள்
காளான்கள் அல்ல...
காலன்கள் - வீரத்தின் கலன்கள் !
குருதியின் பகுப்பொருளாய்
படர்ந்துபோன வீரத்தை,
காலம் காலமாக - உடலோடு
உடுத்தியிருக்கும் தமிழனுக்கு ,
மரணம் - வாருகையில்
வந்துவிழும் முடிக்குச் சமம் !
வீரமென்பது - வெள்ளைக்கொடியை
சிவப்பாய் ஆக்குவதல்ல !
எதிரியின் மனைவியோ, மகளோ
சுட்டுவிரல் படாமல் நடத்தல் !
பன்றிகள் போலலல்லாமல்,
புலிகள் வன்புணர்ததாய்
வரலாறு கிடையாது !
தன்னலம் துடைத்தெறிந்து,
ஈழ மண்ணுக்காக
துப்பாக்கியை - வாழ்க்கைத்
துணையாய் ஏற்று,
சமர்க்களத்தில்
சூழ்ச்சிகளால் விழுங்கப்பட்டு
உயிருக்கு விடைகொடுத்து,
புதைந்த பூக்களவை !
கண்ணிமைக்கும் நேரத்தில்
காடைகளின்
வெலிக்கடையை
வெடிகடையாய் ஆக்கும்
வல்லமை வாய்த்தது
தமிழனின் வீரம் - எரித்தபின்பும்
எழுந்தமரும் என்பது
எதிரிக்கும் தெரியும் !
ஓர் நாள் ஈழம் பிறக்கும் !
அது எம் எதிரிகளுக்கு
எமன் குறித்த நந்நாள் !
தமிழனின்
கடைசி சொட்டு வீரம்
இதய குடுவைக்குள்
வீழ்ந்து கிடைக்கும்வரை,
எழுந்து நடப்பான் - எதிரி
விழுந்து நடுங்கும் வண்ணம் !
எம் வெற்றி - என் எதிரியின்
குருதி வண்ணம் !
ஆலமரம் அறுக்க - இந்த
அறுவாக்களின் அகவைகளின்
அம்மாக்களாலும் முடியாது !
அம் மாக்களாலும் முடியாது !
விடியும் வரை காத்திருப்போம்,
விடியாவிடில்
சூரியனை விரட்டிப் பிடிப்போம் !
ஏனெனில், இது தமிழினம் !
ஈழ மண்ணில் விதைக்கப்பட்ட ஒவ்வோர் வீரத் தமிழச்சிகளுக்கும், வீர மறவர்களுக்கும்...என் வீர வணக்கம் !