அலை பேசி அழுகிறது.

மோட்டு வளை நோக்கி
நினைவின்றி அமர்ந்திருந்தால்
நோட்டுக் கற்றைகள்தான்
நோகாமல் வந்திடுமோ?
கன்னி நிலம் என்னில்
காதல் விதை விதைத்து
தண்ணீரை வார்ப்பது போல்
தனியாகப் பல பேசி
ஊர் விட்டுச் செல்கையிலே
உரம் விட்டு வளர்ப்பது போல்
ஊர்ப் பட்ட கதையெல்லாம்
உறங்காமல் பேசிக் கொண்டோம்.

உனக்காக நான் இன்று
உதவாக்கரை வேலையினை
உதறித் தள்ளி விட்டு
உனதூர்வந்து நின்றேன்.
“வேலை இல்லை என்றால்
வேலைக்கு அது ஆகாது
சேலை வேட்டி வாங்கிடவே
சம்பளம் எனது போதாது”
பாதியிலே நீ சொன்ன
சாதி வேறு சதி செய்ய
நீதி கேட்டு நானெங்கே
செல்லுவது சொல்லிடுவாய்.

மோட்டுவளை நோக்கி
நினைவின்றி அமர்ந்துள்ளேன்
வேட்டு வைத்து விட்டது
நோட்டுக் கற்றை இலாமையே
“அபாயம்” எனை நீக்கிவிடவே
துபாய்க்கு நீ சென்று விட்டாய்
அபாக்கியம் எனச் சொல்லி என்
அலை பேசி அழுகிறது.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (29-Nov-12, 11:43 am)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 119

மேலே