என்னுள் விளைந்த காதல்

நீ (மனம்) வேண்டாம் என்றாலும் உடலுக்கு தேவைப்படும் காற்றைப்போல
உடல் நிராகரித்த போதிலும், மனதிற்கு
தேவை என்று நுழைந்தது தான்
இந்த காதல்!
புறத்தே இருந்து அகத்தே நுழைந்த காதல்
வெற்றிடத்தில் வீசப்பட்ட காற்றைப் போல
வேகத்தின் சிகரத்தை தொட்டது!
அனல் காற்றுகள் என்னைத் துளைத்துக் கொண்டிருந்த வேலையில்
தென்றலாய் வந்து நுழைந்தது!?
காதல் நுழைந்த விதமானது
பூவின் மலர்ந்த ஓசையைப் போல
மானிடர் அறியாத வண்ணம் நுழையும்!
நிலையற்ற சோகம்(நிலையான அன்பு) உன்னுள் ஏற்பட
நிலை உள்ள காதல் உன்னுள் ஏற்பட வேண்டும்.......