மௌனத்தின் பேச்சுகள்

வெண்ணிற மையினால் எழுதப்பட்ட கவிதையினை
போல அவளது பேச்சுகள்!....................

பார்வைப் புலன்களை கட்டுக்குள் கொண்டு
மனதை பறித்துச் சென்றவள்!...................

இளவம் பஞ்சினைப் போல அவளது கரங்களுக்கு
நான் கொடுக்கும் சித்திரம் என்னவோ!......

அவள் தொட்டு ரசித்த மழைத்துளி புரிந்த
வாழ்நாள் தவம் என்னவோ!..................

தேசிய நெடுஞ்சாலையில் தனிமை கொண்ட
ஒருவனுக்கு தென்றலைப் போலத்தான்
நீ எனக்கு!.........................

என் மனதை பறித்துச் சென்ற உனக்கு
உன் மனதில் எனக்கு இடமளிக்க மறுப்பது ஏன்!........

பசுமை மாறக் காடுகளுக்கு புதல்வனாய் இருந்த
என்னை
பாலைவனத்திற்கு தலை மகனாய் மாற்றினாய்!......

உன் விழிவழியே கூறிய வார்த்தைகள்
என் மனதில் பிரதிபலித்ததன் காதல் என்னவோ!.....

என்னை காட்டும் உனது மல்லிகைகளுக்கு
நன்றி கூறி
உன் பதிலுக்காக நான்!..............................................

எழுதியவர் : வேல் முருகானந்தன்.சி (29-Nov-12, 4:32 pm)
பார்வை : 119

மேலே