................உறக்கமானவள்...............
உறக்கமும் அவளும் ஒன்றெனப்படும் சிற்சிலநேரம்,
பல நேரங்களில் அத்யாவசியம்,
சமயங்களில் தப்பிக்கமுடியாத அவஸ்த்தை,
துணைக்கு யாரையும் அழைக்காமல் தனியே வந்து தழுவும் அமைதி,
விரும்பாவிட்டாலும் வலியவந்து ஓய்வு கொடுக்கும் தன்மை,
யோசித்து சிலாகிக்க எத்தனையோ அர்த்தங்கள் புதிதுபுதிதாய்,
உண்மைதான்..................
அவள் என் உறக்கமானவள்...............