"செத்ததடி நம் காதல் "

பள்ளியில படிக்கும் போது
பசங்க மத்தியில
சுற்றித் திரியும் வேளையில
பாசாங்கு பார்வையில
பரிதவிச்சி போனேனே நானடி

கல்லுரி காலத்தில
காதலிச்ச நேரத்தில
தூரத்தில உன்னுருவம்
தெரிஞ்சாலும் ஒரு துளி
பார்வையிலே கிடைக்கும்
மட்டற்ற மகிழ்சியிலேயே
தொலைந்தே போவேனடி

வேலைக்கு நான் சென்ற நாளிலிருந்து
நாளைக்கு ஒரு தரம்
நீ பேசும் பேச்சுக்காக
நாள் கணக்கா ஏங்கினேனே

உன்னை கரம் பிடிக்கும் நாளை
கவுரவமாக எண்ணி
நடை பயின்ற நாள்
பிறரின் மத்தியில் மேதாவியாக

இன்று கரம் பிடித்து
ஆண்டும் பல கடந்தும் விட்டது
குழந்தையும் வளர்ந்துவிட்டது

இருந்தும் ஏனோ
என்னை பார்த்தாலே
வெறுக்கும் நிலையும் மாறவில்லை
என் பேச்சை கேட்டாலே
அருவெருப்பாய் அசிங்கமாய்
நினைக்கும் உன் நிலையும் மாறவில்ல .....
காதலும் கசந்து விட்டது போலும்

என்று "செத்ததடி நம் காதல் "
யோசித்து பார்க்கிறேன்
வரமாக நினைத்து ஏங்கிய
திருமணம் என்ற ஒரு பாறாங்கல்
தான் நம்மிடையே விழுந்து
உடைத்து விட்டதடி
நம் நுண்ணிய உணர்வையும் காதலையும்

சாகும் நம் காதல் என்று
உள்நெஞ்சு உணர்த்தி இருந்தால்
அத்திருமண வைபோகத்தையே
தீய்ந்து போக விட்டிருப்பேன்
சாக சம்மதித்திருக்க மாட்டேன் என் காதலை

எழுதியவர் : bhanukl (1-Dec-12, 9:38 am)
சேர்த்தது : பானுஜெகதீஷ்
பார்வை : 243

மேலே