புதிய பாடம் ......
மண்ணிற்கும் ,விண்ணிற்கும்
தூரங்கள் அதிகமென்றிருந்தேன்
தூரல்களாய் மழைத்துளிகளைக்
காணாத வரையில் .......
உருவமில்லாப் பொருள்களில்
உயிரேதுமில்லை என்று
உறுதியாய் நானிருந்தேன் ....
உயிர்காற்றை உணராத வரையில் .......
உதிர சம்பந்தமில்லா நபர்களிடத்து
உண்மையான பாசமேதுமில்லை என்று
உறுதியாய் நானிருந்தேன் .......
உயிர் கொடுக்கும் நண்பனைக் காணாத வரையில்..
காதல் எல்லாம் வெறும் போதை என்று
காண்போரிடம் எல்லாம் கத்திக்கொண்டிருந்தேன் ...
பேதை அவளைப் பார்க்காத வரையில் .....
தோல்விகள் மட்டுமே
என் முயற்சிகளின் விடை என்று
முடங்கிக் கொண்டிருந்தேன் ....
முட்டி மோதி ...முயன்று
வெற்றி காணாத வரையில் .......
இப்போது புரிந்து கொண்டேன் .....
எதையும் அறியும் பிரியம் இல்லாதவனுக்கு ..
அம்மாவின் அன்பு கூட
அல்ஜீப்ரா போன்றே என்று !
இப்போது தெளிந்து கொண்டேன்
போராட்டம் இல்லா வாழ்க்கை
நீரோட்டம் இல்லா ஓடையை போன்றே என்று .....
இது .....
நான் மனப்பாடம் செய்த
ஆர்கிமிடீஷ் தத்துவமோ !
ஐன்ஸ்டீன் கோட்பாடுகளோ !
சொல்லித்தராத புதிய பாடம் !
ஆம் ! அனுபவம் என்னும்
அறிய பாடம் !!!