காக்கை கரைவு
வைகறை வேளையில்
வீட்டுக்கூரையில்
காகத்தின் கரைவு
சில மணித்துளிக்குள்
கூரை முழுதும்
காகங்களின் இறைச்சல்
---------------------------------
விருந்து சகுனத்தில்
கூரையை கொத்தின
வீதியின் விழிகள்...
------------------------------------------
வீட்டுச்சுவரோரம்
ஒன்றாய் சுற்றின
அங்கிங்கலைந்த நாய்களும்……..
----------------------------------------------
பலமுறை திரும்பி வந்து
பாவமாய் முழிக்கும்
பால்க்காரன்..
----------------------------------------
சத்தம் கேட்டபடி
பூக்காரியின்
கரம் தொடுத்தது சரம்…..
------------------------------------------------
யாராயிருக்கும்
யூகங்களுடனே
பெருசுகளின் பார்வை....
இத்தனைக்கும் மத்தியிலே
யார் வந்து சொல்வார்
வீட்டுமுற்றத்திலே..
கந்துவட்டி கடன்சுமையில்
மாண்டவளின் மரணசேதியினை.....
கண்ணீர் கதைகளை
கதைத்துக்கொண்டிருந்தன
கூரையில் காகங்கள்.மட்டும்........