காதல் கவிதைகள்

என்னவள்
புன்னகைத்தாள்
பூலோக
பூக்களும் தோற்குமே

என்னவள் நாணம் கண்டால்
வானத்தில் உலா வரும்
ஆண் மேகங்களும்
ஆசை கொண்டு
மீசை முருக்குமே

என்னவள் அழகு முகம்
காண வேண்டி
காலை
கதிரவனும்
காத்துக்
கிடக்குமே என்னவளின் வாசலில்

எழுதியவர் : கவிமணியன் (3-Dec-12, 7:28 am)
Tanglish : kaadhal kavidaigal
பார்வை : 209

மேலே