இலக்கணம் இல்லா இசை ...!

வெள்ளாடுகளை ஓட்டிக்கொண்டு
வெள்ளாமை முடிந்த வயல்வெளியில்
பூத்திருந்த சில புற்களைத்
தீனி காட்டி விட்டு
வரப்பினோரம் காத்திருந்த ஆயனுக்கு
காலாண்டர் கிருஷ்ணர் நினைவுக்கு வர
அவனைப்போல தனித்திருந்த
முள்ளுக்கம்பைப் புல்லாங்குழலாக்கி
கணுக்களில் விரல் வைத்து
நுனியை வாயில் வைத்து
ஏழு ஸ்வரம் எட்டுக்கட்டு
இவற்றின் இலக்கணம் மீறிய
ஒரு இசையில் இலயித்துக்கொண்டிருந்தான்
இதழின் ஓரம் இரத்தம்
தாளம் போட்ட படி
மண் தரை தொட்டது ...!

எழுதியவர் : த.மலைமன்னன் (4-Dec-12, 10:44 am)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 145

மேலே