கவிதை

உள்ளத்தின் உணர்வுகளை
உலகிற்குச் சொல்லிட
எண்ணங்கள் எழுத்தாகி
அன்னைத் தமிழால்
அமைத்திடும் கூட்டணியே
கவிதை !

மகிழ்ந்திடும் நேரத்திலும்
வருந்திடும் காலத்திலும்
தோன்றிடும் உணர்வுகளை
வார்த்தை வடிவமாக்கி
உருவாகிடும் உயிரே
கவிதை !

பெற்றவர் மறைந்தாலும்
உற்றவர் இறந்தாலும்
தோழமை தோற்றாலும்
காதல் கருகினாலும்
எழுகின்ற எண்ணங்களே
கவிதை !

தனித்திடும் நேரங்களில்
தணியாத தாகத்தால்
இனித்திடும் இளநீராய்
பனித்திடும் நீர்த்துளியாய்
கனிந்திடும் தமிழே
கவிதை !

கவலைகள் கரைந்திட
சுமைகள் குறைந்திட
உறங்கிடும் உள்ளத்தை
உணர்வால் எழுப்பிட
உதவிடும் தமிழே
கவிதை !

ஏக்கத்தைப் போக்கிடவும்
வாட்டத்தை நீக்கிடவும்
ஊக்கத்தை அளித்திடவும்
உற்சாகம் பெருகிடவும்
மருந்தாய் உதவிடும்
கவிதை !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Dec-12, 11:25 am)
பார்வை : 208

மேலே