நாய் கூட குரைக்கும்.
சுற்றியுள்ள கூட்டம் உன்னை
குற்றவாளி என சுட்டினும்
பற்றி வரும் பகையோ உனை
வெற்றுடம்பாய் கிழிப்பினும்
பெற்றதன் பிள்ளையைத் தாயே
அற்று தன் பாசம் அறுப்பினும்
உற்ற உன் கொள்கை வழி செல்.
கற்றவன் நீ நன்கு அறிவாய்
தெரியாத மனிதரைப் பார்த்து
நாய் கூட குரைக்கும்.